வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
“இத் தேர்தலை இலக்காக கொண்டு அரசாங்கத்தால் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு நாட்டை இட்டுச் செல்ல முடியாது. வாகனங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து, ஆகஸ்ட் மாதத்திற்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் எப்படி படிப்படியாக நீக்கப்படும் என்பது குறித்து அரசின் நிலைப்பாட்டை நாங்கள் உங்களுக்கு தெரிவிப்போம். வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களுக்கான அனுமதியை முதல் கட்டத்தில் வழங்குவோம். ஆனால் 2025 முதல் காலாண்டில் தனியாருக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறோம்”. என்றார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇