இன்னும் ஒரு மாதத்தில் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 38 ரூபாவாக குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரத்னசிறி அழககோன் தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தி நுகர்வுக்குத் தேவையான அளவை விட அதிகமாக இருப்பதால் டிசம்பர் மாதத்திற்குள் முட்டைகள் அதிகமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது மாதத்திற்கு 6 லட்சம் முட்டைகள் உற்பத்தியாகி வருவதால், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
முட்டை இறக்குமதிச் செலவை உள்ளூர் முட்டைத் தொழிலை மேம்படுத்த பயன்படுத்தினால், நுகர்வோர் பாதுகாக்கப்படுவார்கள் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇