எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் 1916 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
வெள்ளை ஈ நோய் உள்ளிட்ட தென்னைச் செய்கை தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் விவசாயிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கக்கூடிய வகையில் தொலைபேசி இலக்கத்தை வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, தென்னை பயிர்ச்செய்கை சபைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தெரிவிக்கப்படும் எந்தவொரு பிரச்சினைக்கும் உடனடியாகப் பதிலளித்து, அப் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதற்கு அதிகாரிகள் தயாராக உள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇