இலங்கை 500 மில்லியன் டொலருக்கு நிகரான கடனை யுவானில் இருந்து பெறுகிறது!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை, 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நிகரான சீன யுவான் மதிப்பிலான கடனைப் பெற உள்ளது.

தொலைபேசி நேர்காணலொன்றில் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ இதனை தெரிவித்ததாக ப்ளும்பர்க் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள், இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இத் திட்டம் முடிவடைய இன்னும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் தேவைப்படுகிறது.

புதிய யுவான் மதிப்பிலான கடன், 2019 ஆம் ஆண்டில் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து இலங்கை கடன் வாங்குவதற்கு ஒப்புக்கொண்ட 989 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குப் பதிலீடாகும்.

அதன்படி, இடைநிறுத்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தை மீண்டும் தொடங்க 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான யுவான் மதிப்பிலான கடனை இலங்கை பெற உள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இத் திட்டத்துக்கு அரசாங்கம் மேலதிக நிதியை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக ப்ளும்பர்க் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects