ஜனாதிபதி நிதியத்தின் கீழ் புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கான இந்த மாதத்திற்குரிய புலமைப்பரிசில் கொடுப்பனவு தகுதியானவர்களின் வங்கிக் கணக்குகளில் 01.08.2024 அன்று நேரடியாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு இது குறித்து குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்று, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 3,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபாய் வீதம் புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
தரம் 01 முதல் தரம் 11 வரை தகுதிபெற்ற 3,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபாய் வீதம் 01.08.2024 அன்று உரியவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇