அரச மற்றும் தனியார் பேருந்துகளில் புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதற்கட்டமாக 40 தொழிநுட்ப கருவிகளை பேருந்துகளில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

அத்துடன் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சாரதிகள் சோர்வாக இருந்தால், தூக்கத்தில் இருந்தால், நித்திரைக் கலக்கம் இருந்தால் அல்லது பணியில் இருக்கும்போது செய்யக்கூடாத பிற விடயங்களைச் செய்தால், அவர்களுக்கு நினைவூட்ட இந்த AI தொழில்நுட்பம் பயன்படும். இந்த அம்சங்களை இலங்கையில் உள்ள நிறுவனங்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வருகின்றன. ஆனால் அவை பொதுப் போக்குவரத்திற்கு, குறிப்பாக மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படவில்லை. எனவே, அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர், அவர்கள் தங்கள் நிர்வாக அறிவு, தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்க விருப்பத்துடன் முன்வந்தனர். முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 40 கருவிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects