செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பள்ளத்திற்கு ‘லால்’ என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பெயரிட்டுள்ளது.
இந்திய இயற்பியலாளரான தேவேந்திர லாலை கௌரவிக்கும் வகையில் குறித்த பள்ளத்திற்கு ‘லால்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இயற்பியலாளர் தேவேந்திர லால் (1929-2012) ஒரு புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி ஆவார். இவர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை நிறுவிய முன்னோடிகளில் ஒருவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇