ஒரு வருடத்திற்கு தேவையான புற்றுநோய் மருந்துகளின் முதல் தொகையை சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (11.06.2024) இடம்பெற்றது. இவற்றின் பெறுமதி 225000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும்.
உள்நாட்டு வைத்தியசாலைகளில் புற்றுநோய்க்கென சிகிச்சைப் பெறும் நோயாளர்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் மருந்துகளே இவ்வாறு சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் எல்.டீ.எஸ்.லேடர் – டே ஸென்ட் ச்செரெட்ஸ் நிறுவனத்தின் ஆசிய வலய நலன்புரி பணிப்பாளர் மிகி லுய் இந்த மருந்து தொகையை அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கையளித்தார்.
சுகாதார அமைச்சிற்கும் குறித்த நிறுவனத்திற்குமிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய இந்த மருந்து தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. 13 வகையான புற்றுநோய் மருந்துகள் இதில் உள்ளடங்குகின்றன. அவற்றின் மொத்த பெறுமதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇