2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகின்றன.
குறித்தப் போட்டியில், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தய இறுதிப்போட்டி 06.08.02024 அன்று நடைபெற்றது.
100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை யார் வெல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு இரசிகர்களிடமும் இருந்தது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒலிம்பிக் பிரபலமாக வலம் வருபவருக்காக அனைத்து இரசிகர்களும் காத்திருந்த நிலையில், அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் முதலிடத்தைப் பிடித்தார்.
100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை வெறும் 9.784 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார
முன்னதாக, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை உலகின் அதிவேக வீரரான உசைன் போல்ட் 9.63 நொடிகளில் நிறைவு செய்திருந்தார்
உசைன் போல்ட்டுக்கும் நோவா லைல்ஸ் இற்கும் இடையில் 0.16 நொடி வித்தியாசங்களே உண்டு.
அத்துடன் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்த 8 வீரர்களில் 7 வீரர்கள் 9 நொடிகளில் போட்டியை நிறைவு செய்தனர்.
இரண்டாவதாக வந்த ஜமைக்கா நாட்டின் தாம்சனும் அதே 9.79 நொடிகளில் இலக்கை அடைந்தார்.
இதனால் போட்டியில் முதல் இடத்தை யார் பிடித்தார் என்று தெரிவிப்பதில் சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டது.
தாம்சனுக்கும் நோவாவுக்கும் இடையில் 0.004 நொடி வித்தியாசங்கள் காணப்பட்ட நிலையில், நோவா தங்கப் பதக்கத்தை வென்றார்.
நோவாவின் வெற்றிப் பலராலும் கொண்டாடப்படுகின்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, நோவாவின் எக்ஸ் தள பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எனக்கு ஆஸ்துமா. ஒவ்வாமை, டிஸ்லக்ஸியா, ஏடிடி, மன அழுத்தம் இருக்கிறது. இது எல்லாம் இருந்தும் என்னால் சாதிக்க முடிந்தது என்றால், ஏன் உங்களால் முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.
சோதனைக் கடந்து சாதனைப் படைத்த யார் இந்த நோவா
அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் பிறந்தவர் நோவா லைல்ஸ்.
27 வயதில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்ட அவர், பெற்றோரின் வழி நடத்தலின் கீழ் ஓட்டப்பந்தய பயிற்சியில் இறங்கினார்.
2020ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
கடந்த ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் மார்ஷெல் ஜேக்கப்பை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தை வென்றார்.
உசைன் போல்டிற்கு பிறகு தடகள போட்டியின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் நோவா லைல்ஸ், ஆறு முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அமெரிக்காவுக்குத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார் நோவா லைல்ஸ்.
இறுதியாக 2004ஆம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇