எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர், வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.
அதேநேரம், தேர்தல் சட்டங்கள் தொடர்பில் அந்தந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇