இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் தமது எக்ஸ் தளத்தில் இன்று (08) காலை ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இனி தமக்குப் போராட சக்தியில்லை. நான் தோற்று விட்டேன், மல்யுத்தம் வென்று விட்டது எனவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தயாரின் கனவும், தமது தைரியமும் உடைந்து போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்த வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் கூடுதல் எடையுடன் காணப்பட்டதால் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில், சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வெள்ளிப்பதக்கம் கோரி மேன்முறையீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇