சதொச சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இதற்கமைய 260 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா 248 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ வெள்ளைப் பட்டாணியின் விலை 42 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் பச்சைப்பயறு, பச்சைப் பட்டாணி போன்றவற்றின் விலைகள் 30 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் காய்ந்த மிளகாய், வெள்ளை அரிசி மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇