USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சேவ் நிறுவனம் (SAFE FOUNDATION) குடிவரவு – குடியகல்வு திணைக்களத்துடன் இணைந்து நடாத்திய விழிப்புணர்வுக் குறும்படப் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த இயக்குநரான கி.கிஷாந்த் எழுதி இயக்கிய “Free” எனும் குறும்படம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் 08-08-2024 அன்று நடைபெற்ற மனித விற்பனைக்கெதிரான சர்வதேச தின நிகழ்வுகளில் இதற்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் மனித விற்பனைக்கெதிரான பிரச்சாரத்திற்காக நடாத்தப்பட்ட சித்திரப் போட்டி, குறும்படப் போட்டி என்பவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின் போது மனித விற்பனை தொடர்பான புத்தகமொன்றும் அமெரிக்கத் தூதுவரினால் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற Free குறும்படத்தின் இயக்குநர் கிஷாந்த் மற்றும், உதவி இயக்குநரும் நடிகருமான M.பிரதிஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇