620 அடி உயரமான ஒரு சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை நாசா வெளியிட்டுள்ளது.
விண்வெளியிலிருந்து பூமிக்கு ஏற்படும் ஆபத்துகள் தொடர்பிலான ஆய்வுகளை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.
விண்வெளியில் எண்ணில் அடங்காத பாறைகள் சுற்றி வருகின்றன.
இந்த நிலையில் பூமியிலிருந்து சுமார் 2,850,000 மைல்கள் தொலைவில் இந்தச் சிறுகோள் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மணித்தியாலத்திற்கு 24,779 மைல் வேகத்தில் பயணித்து வரும் இந்தச் சிறுகோள், நிலவைவிட 3 மடங்கு தொலைவிலிருந்தாலும் ஒப்பிட்டளவில் பூமிக்கு மிக நெருக்கத்தில் வரவுள்ளது.
இந் நிலையில் குறித்த சிறுகோளை நாசா உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇