41 ஆண்டுகளாக நீடித்த டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டச் சாதனை ஒன்றை இலங்கை வீரர் மிளான் ரத்நாயக்க முறியடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியொன்றில் 9ம் இலக்க வீரராகக் களமிறங்கி அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக இந்தியாவின் முன்னாள் வீரர் பெல்விந்தர் சந்து இதுவரையில் திகழ்ந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக 1983ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் பெற்ற 71 ஓட்டங்களே இதுவரையில் சாதனையாக இருந்தது.
இந் நிலையில் நேற்று ஆரம்பமான இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஒன்பதாம் இலக்க வீரராகக் களமிறங்கிய மிளான் ரத்நாயக்க 135 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பெற்று இந்தச் சாதனையை முறியடித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇