மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவையுடைய இளைஞர் யுவதிகளை தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பான செயற்றிடம் உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சந்திரகலா புவனேஸ்வரன் ஒழங்கமைப்பில் மாவட்ட செயலகத்தில் 13.12.2024 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டத்திற்கான JICA அமைப்பின் நிபுணர் சிமிசு டக்காசி மற்றம் சமூக சேவை பணிப்பாளர், சமூக சேவை உத்தியோகத்தர், மாவட்ட மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் எனப்பலரும் கலந்து கொண்ட னர்.
சமூக சேவை திணைக்களமும், JICA செயற்திட்டமும் இனைந்து நடாத்தும் இத்திட்டத்தில் இந்த வருடம் நடந்து முடிந்த நிகழ்வுகளில் மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் நான்கு பிரிவுகளில் மாத்திரம் ஆறு விசேட தேவையுடைய இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் 2024 ஆம் ஆண்டுகளில் 25 வீதமான இம் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்னும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇