2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது.
இலங்கை உட்பட 10 அணிகள் பங்குபற்றும் குறித்த தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந் நிலையில் குறித்த தொடருக்கான போட்டி அட்டவணை 26.08.2024 அன்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி A குழுவில் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளும், B குழுவில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளும் காணப்படுகின்றன.
இதற்கமைய இலங்கை மகளிர் அணி தமது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇