இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் டேவிட் மாலன் (Dawid Malan), தனது 37ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும், சதம் அடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
இருப்பினும், கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ணத்திற்குப் பிறகு அவர் இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை.
மேலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டதன் பின்னர் தனது முடிவை உறுதிப்படுத்தியுள்ளார்.
மாலன் 22 டெஸ்ட் போட்டிகளில் 1,074 ஓட்டங்களையும், 30 ஒருநாள் போட்டிகளில் 1,450 ஓட்டங்களையும் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் 1,892 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇