ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகங்களில் அஞ்சல் மூல வாக்குகளைச் செலுத்த முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் செப்டம்பர் 4ஆம், 6ஆம் திகதிகளில் சிரேஷ்ட உதவி மற்றும் உதவி காவல்துறை அலுவலகங்கள், காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், காவல்துறை நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட காவல்துறை பிரிவுகள் என்பனவற்றிலும் அஞ்சல் மூல வாக்களிப்பைப் பதிவு செய்ய முடியும்.
எதிர்வரும் 5ஆம், 6ஆம் திகதிகளில் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அஞ்சல் மூல வாக்குகளைக் குறித்த தினங்களில் செலுத்த முடியாதவர்களுக்குச் செப்டம்பர் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிக்க மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇