கடந்த பெரும்போக பருவத்தில் நெல் உற்பத்தி 2.63 மில்லியன் மெட்ரிக் தொன்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 2.4 சதவீதம் வீழ்ச்சியாகும்.
அத்துடன், கடந்த மே மாதத்தில் மீன் உற்பத்தியும் 5.3 சதவீதம் குறைவடைந்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதே காலப்பகுதியில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சீனி உற்பத்தியும் 33.8 வீதத்தாலும், தேங்காய் உற்பத்தி 0.5 வீதத்தாலும் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇