சேவையிலிருந்து நீக்கப்பட்ட 50 சொகுசு ரக பேருந்துகள் எதிர்வரும் 6 மாதங்களில், மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள், உதிரிபாகங்களின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் காரணமாக தற்போது சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பேருந்துகள், கடுபெத்த அதிசொகுசு ரக சுற்றுலா போக்குவரத்து சேவை நிறுவனத்தில் தரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டின் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கத்தினால், கொண்டு வரப்பட்ட 50 சொகுசு ரக பேருந்துகளே இவ்வாறு தரித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பேருந்துகளால் நாளாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகமான தேறிய இலாபத்தை ஈட்ட முடியும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
குறித்த பேருந்துகளை விரைவாக திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇