இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், நியூசிலாந்து அணிக்கான பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி ஆசியாவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இத் தொடர்களுக்காக ரங்கன ஹேரத் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்காக விளையாடிய ரங்கன ஹேரத், 433 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதேநேரம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் விக்ரம் ரத்தோரும் நியூசிலாந்துக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது நியூசிலாந்தின் ஆலோசகராக செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇