இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் முதல் பத்து நாட்களில் 77 ஆயிரத்து 482 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 13,511 ஆகும்.

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 14 இலட்சத்து 45 ஆயிரத்து 770 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும், மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 174,608 சுற்றுலாப் பயணிகளும், மே மாதத்தில் 132,919 சுற்றுலாப் பயணிகளும், ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகளும், ஜூலை மாதத்தில் 200,244 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects