என்றும் இளமையாக இருக்க…
சிலருக்கு வயது அதிகமாக இருந்தாலும், அவர்களை பார்த்தால், நிச்சயமாக தெரியாது. காரணம், அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளும் உடற்பயிற்சிகளும்தான். வாழ்க்கையில் சில விடயங்களை முறையாக கையாண்டால், இளமை என்றும் நீடித்திருக்கும்.
பதினாறு வயதுக்கு மேல், கொலாஜன் உற்பத்தி அதிகமாக இருக்கும். அவைதான் சருமத்துக்கு நெகிழ்வுத் தன்மையை கொடுத்து, சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கின்றன.
வயதாகும்போது, இதன் உற்பத்தி குறையும். நீண்ட நாட்கள் தக்கவைக்க வேண்டும் என்றால், ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவுகளை உண்ணும்போது, கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். சருமமும் வறட்சி குறையாமல் இருக்கும். எந்தெந்த உணவுகளில், புரோட்டினும் நார்ச்சத்தும் அதிகளவில் உள்ளன என்பதையும் பார்ப்போம்.
பெர்ரி பழங்கள்:
இவை அதிக அன்டி ஒக்சிடென்ட்களை கொண்டுள்ளன. நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன. இப்பழத்தை உண்டால், நச்சுகள் வெளியேறி, சருமம் அழகாக இருக்கும்.
நீர்:
குடிநீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். சிலசமயம், தாகம் வந்தால் தவிர, நீரை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. அவ்வப்போது, சிறிது இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும். நச்சுக்களும் வேண்டாத கழிவுகளும் வெளியேற, நீர் அருமருந்து.
சிவப்பு திராட்சை:
நிறைய அன்டி ஒக்சிடென்ட்கள் உள்ளன. இளமையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் சிவப்பு திராட்சைக்குண்டு. விட்டமின் சியில் இருக்கும் அன்டி ஒக்சிடென்ட்டை விட, இந்த சிவப்பு திராட்சையில் 50 மடங்கு அதிகமுள்ளது. இவை சருமத்தின் திசுக்களில் ஏற்படும் பிரச்சினைகளை சீர் செய்து சரிப்படுத்திவிடும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇