இடம்பெயரும் பறவை இனங்கள் இலங்கை வரத் தொடங்கியுள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாத இறுதி வரை குறித்த பறவைகளின் வருகை இடம்பெறும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில், கடற்கரைக்கு அருகில் உள்ள உயரமான கட்டடங்களில் பறவைகள் மோதி உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே, இரவு நேரங்களில் இவ்வாறான உயர்ந்த கட்டடங்களில் கடலை நோக்கிய திசையில் உள்ள மின்விளக்குகளை அணைப்பதன் மூலம் இந்தநிலைமையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇