காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்குமிடையில் இடம்பெறுகின்ற பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிவகங்கை என்ற இக் கப்பல் சேவை, போதிய பயணிகளின் எண்ணிக்கையின்மை காரணமாக வாராந்தம் 3 தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
எனினும் தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இம்மாதம் 21ஆம் திகதிக்குப் பின்னர் வாராந்தம் 4 நாட்கள் இந்த கப்பல் சேவை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 15ஆம் திகதி வரையில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படும் இக் கப்பல் சேவை, 21ஆம் திகதி முதல் சனிக்கிழமையும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇