“அஸ்வவெசும” நலத்திட்ட உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான தகவல் கணக்கெடுப்பு ஜூலை 15 முதல் 30 வரை நடத்தப்படும் என்று நலன்புரிப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது.
முதல் கட்டத்தில் தகுதி பெற்ற 18 இலட்சத்துக்கும் அதிகமானோர் தவிர, மேலும் 4 இலட்சத்து ஐம்பதாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி நான்கு (450,924) விண்ணப்பங்கள் இரண்டாம் கட்டத்திற்குப் பெறப்பட்டுள்ளன, அவற்றில் பெற தகுதியானவர்களை தெரிவு செய்யும் பணிகள் இம்மாதம் நிறைவடையும்.
“அஸ்வவெசுமவின் முதல் கட்டத்திற்கு 1,854,000 பேர் தகுதி பெற்றுள்ளனர், இதற்காக 58.5 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விண்ணப்பிக்க முடியாதவர்கள் அல்லது தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க பொதுநலப் பலன்கள் சபை அவகாசம் அளித்துள்ளது.
இதனிடையே, களத் தகவல் சேகரிப்பை திறம்படச் செய்ய புகைப்படம் எடுக்கும் வசதி, ஜியோ மேப் மற்றும் குரல் பதிவு வசதிகளுடன் கூடிய புதிய மொபைல் அப்ளிகேஷன் மென்பொருளை (மொபைல் ஆப்) நலப் பலன் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, மொபைல் அப்ளிகேஷன் மென்பொருளின் ஊடாக தகவல் சேகரிப்பை முன்னோடி திட்டமாக கொழும்பு பிரதேச செயலகத்தில் நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇