தென் மாகாணத்தில் அன்று (20.10.2025) முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம் ஆகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் குறித்த வசதி வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மாகாணங்களையும், இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
GovPay செயலி மூலம் தொலைபேசி அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்தும் எளிதாகப் பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










