கடந்த சில நாட்களாக சந்தையில் மிக அதிகமாக இருந்த மரக்கறிகளின் விலை, மிக வேகமாக குறைந்து வருவதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட கரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், கறிமிளகாய் போன்ற காய்கறிகளின் விலை வேகமாக குறைந்து வருகிறது.
இதேவேளை, கொழும்பு மெனிங் சந்தையில் ஒரு கிலோ போஞ்சி 300 ரூபாவுக்கும், கரட் 1 கிலோ 300 ரூபாவுக்கும் , முட்டைக்கோஸ் கிலோ 320 ரூபாவுக்கும், தக்காளி கிலோ 300 ரூபாவுக்கும், கத்திரிக்காய் கிலோ 150 ரூபாவுக்கும் பச்சை மிளகாய் கிலோ 300 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.