பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் மிதமான அளவைக் குறிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
பெரும்பாலான பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட்டெண் மிதமான அளவிலும், கேகாலை, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் அம்பாந்தோட்டையில் நல்ல நிலையிலும் இருந்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவைக் குறிக்கும் வகையில் காற்றின் தரச் சுட்டெண் 34 தொடக்கம் 80 க்கு இடையில் இருக்கும் எனவும், யாழ்ப்பாணம், வவுனியா, கேகாலை, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் அம்பாந்தோட்டையில் நல்ல நிலையிலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமான நிலையில் காணப்படும்.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



![]()










