தாய்லாந்தில் நடைபெற்ற 37ஆவது செப்பக் டெக்ரோ (Sepak Takraw) உலக சம்பியன்ஷிப் கிங்ஸ் கிண்ண போட்டியில் பங்குபற்றிய இலங்கை 5 வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தது.
தாய்லாந்தின் நாக்ஹொன் ரட்சாசிமா விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் கிங்ஸ் கிண்ண போட்டியில் 29 நாடுகளைச் சேர்ந்த சுமார் 750 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.
செபக் டாக்ரோ என்பது கால்களைப் பயன்படுத்தி விளையாடப்படும் கிக் புட்போல் விளையாட்டாகும்.
இந்த விளையாட்டு தாய்லாந்தில் உதயமாகி, தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியதுடன் இப்போது மேற்கத்தய நாடுகளில் கிக் வொலிபோல் என அழைக்கப்படுகிறது.
கரப்பந்தாட்டத்தில் பின்பற்றப்படும் அனைத்து விதிகளும் இந்த விளையாட்டிற்கும் பொருந்தும் என இலங்கை செப்பக் டெக்ரோ சம்மேளனத் தலைவர் நிலாம் ஹலால்தீன் தெரிவித்தார்.
பெண்கள் பிரிவில் 3 வெண்கலப் பதக்கங்களையும் ஆண்கள் பிரிவில் 2 வெண்கலப் பதக்கங்களையும் இலங்கை வென்றெடுத்தது.
இப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியினர் 10.09.2024 அன்று இரவு நாடு திரும்பினர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇