கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மாக்கும்புர பல்நிலை போக்குவரத்து நிலையத்திற்கும் இடையில் இன்று (10.01.2025) முதல் விசேட பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையினால் இந்த விசேட சொகுசு பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் பயணிகளின் நலன்கருதி குறித்த பேருந்துகள் நாளாந்தம் 10 தடவைகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய காவல் நிலையத்திற்கு முன்பாக இருந்து பேருந்து பயணம் ஆரம்பமாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து சேவைக்கான கட்டணமாக 450 ரூபாய் அறவிடப்படவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇