ஹரி போட்டர் தொடர் ஒன்று படமாக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இத் தொடருக்காக புதிய குழந்தை நடிகர், நடிகைகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான ஆட்சேர்ப்புகளுக்கான தெரிவு இந்த வாரத் தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹரி, ரொன் மற்றும் ஹெர்மினின் கதாபாத்திரங்களுக்குத் தகுதிபெற, 2025,ஏப்ரல் மாதத்தில் 9 முதல் 11 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதுடன் இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் புதிய தொடருக்கான வெளியீட்டுத் திகதி இன்னும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் 2025-2026 ஆம் ஆண்டிற்குள் இங்கிலாந்தில் படமாக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇