நாட்டில் தற்போது டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38,167 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் பதிவாகியுள்ளனர்.
அதன்படி, மேல் மாகாணத்தில் இதுவரையில் 15,973 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தின் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 17 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇