பிரதமர் மோடிக்குப் பரிசாக அளிக்கப்பட்ட பொருட்கள் அவ்வப்போது மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியின் ஒருபகுதி ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது.
நேற்று பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 6ஆவது முறை ஏலம் விடும் நிகழ்வு தொடங்கியது.
இந்த முறை அவருக்குப் பரிசாகக் கிடைத்த 600க்கும் மேற்பட்ட கலைப் பொருட்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த ஏலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 2ஆம் திகதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇