சீன அரசாங்கம் இலங்கையிலுள்ள 4.3 மில்லியன் மாணவர்களுக்குப் பாடசாலைச் சீருடைகளை நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளது.
இதன்படி சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள பாடசாலைச் சீருடைகளின் முதலாவது தொகுதியை எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி பெற்றுக்கொள்ளவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் பாடசாலை சீருடைகளின் இரண்டாவது தொகுதி நவம்பர் 21 ஆம் திகதியும், மூன்றாவது தொகுதி டிசம்பர் 20 ஆம் திகதியும் வழங்கப்படும் என சீன அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த சீருடைகள் விநியோகிக்கப்படும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇