2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாதது ஒரு தடையாக இருக்காது என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடந்த ஜூலை 3 ஆம் திகதி முதல் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஜூலை 23 ஆம் திகதியுடன் விண்ணப்பக் காலம் நிறைவடைகின்றது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது அதிகாரப்பூர்வ பரீட்சை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைக் கவனமாகப் பின்பற்றுமாறு பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு காரணத்திற்காகவும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் விவரங்கள் அல்லது விசாரணைகளுக்கு, 1911, 011-2784537, 011-2786616, 011-2784208, 011-2784422 ஆகிய தொலைபேசி எண்களின் ஊடாக பரீட்சைத் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளலாம்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










