கல்விக்காக அதிக ஒதுக்கங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை காலதாமதமாகி வரும் அனைத்து பரீட்சைகளின் பெறுபேறுகளை துரிதமாக வெளியிடுமாறு பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇