பங்களாதேஷை சேர்ந்த சுமயா கான் என்ற பெண், சாப்ஸ்டிக்ஸ் மூலம் ஒரு நிமிடத்தில் 37 அரிசியை உட்கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
அவரது இந்த சாதனைக் காணொளியை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் நூடுல்ஸ் மற்றும் வழக்கமான உணவுகளை உட்கொள்ள கைக்குப் பதிலாகப் பயன்படுத்தும் பற்றுக்குச்சிகள் தான் சாப்ஸ்டிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
சாப்ஸ்டிக்ஸை பயன்படுத்துவது எளிதாகத் தோன்றலாம், ஆனால் இதனைச் சரியாகப் பயன்படுத்த நிறையப் பயிற்சியும் பொறுமையும் தேவை.
தானியங்களை சாப்ஸ்டிக்ஸ் கொண்டு உட்கொள்வது கடினமான விடயம்.
அந்தவகையில், இந்த சவாலை மேற்கொண்டு சுமயா கான் என்ற பெண் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇