மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், 30.09.2024 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
அதன் பிரகாரம் , ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.
இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇