பதுளை மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட ரயில் பாதையில் காணப்படும் ஒன்பது வளைவு பாலத்தில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய – இலங்கையின் கூட்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் , கொழும்பு கோட்டையிலிருந்து பயணிக்கும் மலையக ரயில்கள் அனைத்தும் இன்று (09.10.2024) – (15.10.2024) வரை எல்ல அல்லது பண்டாரவளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
இந் நிலையில், இன்று (09.10.2024) – (15.10.2024) வரை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை ரயில்கள் பதுளை ரயில் நிலையத்திற்குச் செல்லாது.
மேலும், கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் ரயில்கள் பதுளை ரயில் நிலையத்திற்கு மாறாக எல்ல அல்லது பண்டாரவளை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇