செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது. இதன்படி 2024 ஆம் ஆண்டில் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இரண்டாவது முறையாக வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார்.
குறித்த விருதுக்கு இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரிய மற்றும் அவுஸ்திரேலிய அணியின் ட்ரவிஸ் ஹெட் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
அவர்களை வீழ்த்தி கமிந்து மெண்டிஸ் இந்த விருதைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கமிந்து மெண்டிஸ் 90.20 என்ற சராசரியில் 451 ஓட்டங்களைக் குவித்தார்.
அத்துடன் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 5 சதங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇