தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொது மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்துச்சபை தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், ஹட்டன், நாவலப்பிட்டி, நுவரெலியா, பதுளை உள்ளிட்ட நகரங்களுக்கு மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொதுமுகாமையாளர் டி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்தார்.
இந்த நிலையில், பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தூர சேவைகளுக்கான பேருந்து நிலையத்திலும் பிரதான நகரங்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










