எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை 3 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை விலை அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இம்மாதம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் முட்டையொன்றை 38 அல்லது 40 ரூபாவிற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் சந்தையில் முட்டை விலையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், கேக் மற்றும் பேக்கரி தொழிலுக்குத் தேவையான முட்டைகளை விநியோகிக்கும் வகையிலும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇