எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 16.10.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்களிப்பின் போது வாக்காளரின் இடது கை சிறுவிரலில் அடையாளம் இடப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் சிறுவிரலில் இடப்பட்ட மை, இன்னும் சிலருக்கு நீங்காத நிலையில், தற்போது ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇