சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு வியாபாரிகள் வராத நிலை காணப்படுவதாக அப் பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக சில மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் உள்ளதாகவும் அவை பழுதடைவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது சந்தையில் கோவா, கெக்கரிக்காய் , பீர்க்கங்காய், கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇