தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதால் , சில பகுதிகளில் தேங்காய் ரூ.180 முதல் 200 வரை விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
மேலும், கொழும்பைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் செவ்விளநீர் ரூ.160 முதல் 200 வரை விற்கப்படுகிறது.
இதனிடையே, ஒரு சிறிய தேங்காய் ரூ.120 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் விலை உயர்விற்கு மத்தியில் சந்தையில் தேங்காய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇