நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை (08.02.2024) அன்று சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கௌரவ ஆளுநர் தெளிவுப்படுத்தினார். விடயங்களை கேட்டறிந்த நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens),, குடாநாட்டிற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயார் எனக் கூறினார். அத்துடன் முதலீட்டு திட்டங்களை ஊக்குவித்து வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான பங்களிப்பை வழங்கவும் தயார் என அவர் உறுதியளித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇