நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (28) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள அரிசி ஆலைகளில் உள்ள அரிசி மற்றும் நெல் இருப்புக்கள் குறித்த தரவுகளை நேற்றும் (27) மற்றும் முந்தைய தினமும் (26) பெற்றுக்கொள்ள நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்திருந்தது.
நாட்டு, வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி உள்ளிட்ட பல்வேறு அரிசி வகைகளுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்திருந்தார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் பாரிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளை ஆய்வு செய்த போது, அதிகாரிகளுக்கும் ஆலைத் தொழிலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇