கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் 2023 ஆண்டிற்கான ஒளி விழா நிகழ்வு 20.12.2023 அன்று பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக அருட்பணி.டெரன்ஸ் ராகல் மற்றும் அருட்பணி. ஜீ.லட்சுமனகாந் ஆகிய இருவரும் கலந்து கொண்டதோடு மேலும் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.அமலினி கார்த்தீபன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், கணக்காளர் ஜோர்ச், நிருவாக உத்தியோகத்தர் திருமதி.புனிதநாயகி ஜெயக்குமார் மற்றும் அலுவலக உத்தியோகத்தார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇